அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதிய சாதனை படைத்த மாடுபிடி வீரர்!

Share this News:

மதுரை (18 ஜன 2020): அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் புதிய சாதனை படைத்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள், 739 காளைகள் பங்கேற்றன.

இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ரஞ்சித் குமார் சுற்றி சுற்றி காளைகளை அடக்கினார். மிகவும் வலுவான காளைகளை கூட, இவர் அசால்ட்டாக அடக்கினார். மற்ற வீரர்கள் நெருங்குவதற்கு அச்சப்பட்ட காளைகளை கூட, இவர் பயமின்றி அடக்கினார்.

இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் ரஞ்சித் குமார் 16 காளைகளை அடக்கினார். 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி ஒவ்வொரு காளைகளை அடக்கியதற்கும் தனி தனியாக பரிசு வழங்கப்பட்டது.

ரஞ்சித் குமார் 16 காளைகளை அடக்கியது புதிய சாதனை என்று கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply