செந்தில் பாலாஜி விடுதலையாவாரா? இன்று தெரியும்!

Share this News:

சென்னை (15 ஜூன் 2023): சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை சார்பில் விசாரணை அதிகாரியான துணை இயக்குநர் கார்த்திக் தேசாரியும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்ய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த மனுக்களை நீதிபதி எஸ்.அல்லி இன்று விசாரிக்கிறார். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான அமலாக்கத் துறையின் மனு மீது இன்று (ஜூன் 15) காலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர், ஜாமீன் உள்ளிட்ட பிற மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.


Share this News: