எஸ் ஐ வில்சன் படுகொலையில் தொடர்புடையதாக இன்னொருவர் கைது!

Share this News:

பெங்களூரு (18 ஜன 2020): எஸ் ஐ வில்சன் படுகொலை வழக்கில் தொடர்புடையதாக மெகபூப் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் ஐ வில்சன் படுகொலை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் எஸ் ஐ வில்சன் படுகொலையில் தொடர்புடையதாக மெகபூப் பாஷா என்பவரை பெங்களூரில் போலீசார் கைதுசெய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply