எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

Share this News:

ராமநாதபுரம் (01 பிப் 2020): எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
களியக்காவிளை செக்போஸ்ட்டில் ஸ்பெஷல் எஸ்ஐ வில்சன் கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் அப்துல் ஷமிம், தவ்பீக் ஆகியோர் முதலில் கைதானவர்கள்.. உடுப்பி ரயில்வே ஸ்டேஷனில் இவர்கள் கைதானார்கள். இருவருமே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்.. இந்த விவகாரத்தில் தமிழக கியூ பிரிவு போலீசார் சிறப்பான விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில்  வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஷேக் தாவூத் என்பவரை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மீனவ கிராமத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பதுங்கி இருந்தவரை போலீஸ் கைது செய்தது.
இவர் ஏற்கனவே என் ஐ.ஏ வால் கைது செய்யப் பட்டு பிணையில் வெளியாகியிருந்த நிலையில் மீண்டும் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply