டெல்லியில் மீண்டும் போராட்டக் காரர்கள் மீது பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு!

Share this News:

புதுடில்லி (01 பிப் 2020): டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.

இந்திய நாட்டில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று துப்பாக்கிச்சூடு நடத்தியவன் கோஷமிட்டுள்ளான் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து தகவல் எதுவும் இல்லை

டில்லி ஜாமியா பல்கலை.,யில் பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தி 2 நாட்களே ஆன நிலையில், இன்று ஷாஹீன் பாக் பகுதியிலும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டெல்லி போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply