ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு!

Share this News:

புதுடெல்லி (26 பிப் 2020): ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற டிரம்புக்கு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வந்த டிரம்பை, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் ஆகியோர் வந்திருந்தனர்.

பின்னர் இரு தலைவர்களும் சிறிதுநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராம்நாத் கோவிந்த், ‘இந்தியாவின் வலிமையான நட்பு நாடு அமெரிக்கா’ என்று புகழாரம் சூட்டினார்.

பின்னர் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, பல மத்திய மந்திரிகள் மற்றும் முதல்வர்கள் சர்பானந்த சோனாவால் (அசாம்), மனோகர் லால் கத்தார் (அரியானா), எடியூரப்பா (கர்நாடகா) மற்றும் சந்திரசேகரராவ் (தெலுங்கானா), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, முப்படை தளபதி பிபின் ராவத், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Share this News:

Leave a Reply