டெல்லி போர்க்களத்திலும் சில ரோஜாக்கள் – முஸ்லிம்களுக்கு கை கொடுக்கும் சீக்கியர்களும் தலித்துகளும்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி வன்முறையில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க குருத்வாராவை திறந்து வைத்துள்ளனர் சீக்கியர்கள்.

டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் வன்முறையை தூண்டும் பேச்சே வன்முறைக்கு காரணம் எனவும், அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் முஸ்லிம்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக குருத்வாராவை திறந்து வைத்துள்ளனர் சீக்கியர்கள். மேலும் சீலாம்பூர் பகுதி தலித்துகள் அவர்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக வன்முறையாளர்கள் நுழையாத வகையில் பாதைகளை அடைத்து வைத்து உதவி வருகின்றனர்.

“போலீசும், அரசும் செய்ய தவறியதை பொதுமக்கள் செய்து வருகின்றனர்” என்று கருத்து தெரிவித்துள்ளார் பிரபல நாவலாசிரியர் நிலஞ்சனா ராய்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply