மாநிலங்களவைக்கு மார்ச் 26 ல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி (26 பிப் 2020): 55 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “55 இடங்களுக்கு ஏப்ரல் மாதம் நிறைவு பெற இருக்கும் பதவிக்கு தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும். மாா்ச் 6–ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மாா்ச் 13 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மாா்ச் 16-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்பப் பெற மாா்ச் 18-ஆம் தேதி கடைசி நாள். மாா்ச் 26-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு அன்று மாலை வாக்குகள் எண்ணப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதில், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், ஏ.கே.செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரது பதவிக் காலம் நிறைவடைய இருக்கிறது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், திமுகவின் திருச்சி சிவா ஆகியோரது பதவி காலமும் முடியவுள்ளது.

மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Share this News:

Leave a Reply