இளையராஜாவுக்கு யுவன் சங்கர் ராஜா பதிலடி?

Share this News:

சென்னை (18 ஏப் 2022): பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பாராட்டியுள்ள நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்ட்டாவில் இட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் ‘அம்பேத்கரும் மோடியும்’ என்கிற நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, மோடி ஆட்சியில் உலகத்தரமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன; முத்தலாக் சட்டம் உள்ளிட்ட மோடி கொண்டு வந்த சட்ட திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என கூறியிருந்தார்.

இளையராஜாவின் கருத்து கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் இளையராஜா தனது கருத்தில் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்ட்டாவில் இட்டுள்ள பதிவில், ‘கருப்பு திராவிடன். பெருமைக்குரிய தமிழன்’ என்பதாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை தந்தையின் மோடி ஆதரவுக்கு மகனின் பதிலடியாக பலரும் கருதுகின்றனர்.


Share this News:

Leave a Reply