திருச்சியில் அதிர்ச்சி – அக்கா தங்கை மயங்கி விழுந்து அடுத்தடுத்து மரணம்!

Share this News:

திருச்சி (25 ஏப் 2020): திருச்சி அருகே இளம் பெண்களான அக்காவும் தங்கையும் மயங்கி விழுந்து அடுத்தடுத்து மரணம் அடைந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் கனகராஜ்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார். இவருக்கு சாந்த மீனா என்ற மனைவியும் உண்டு.

கனகராஜ் சாந்த மீனா தம்பதியினருக்கு லோகநாதன் என்ற 15 வயது மகனும், கோகிலா 13, லலிதா 11 என இரு மகள்களும் உள்ளனர். இவர்களது கூட்டுக்குடும்பம்.. கணவரின் சகோதரர் குடும்பம் என அனைவரும் ஒரே வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று, சாந்தமீனா வெளியில் சென்றிருந்தார்.. ஊரடங்கு என்பதால் இரண்டு மகள்களும் வீட்டில் இருந்தனர்.. அப்போது திடீரென 2 பேருமே மயங்கி விழுந்துள்ளனர்.. இந்த தகவல் அறிந்து பதறியடித்து கொண்டு வந்த உறவினர்கள் கோகிலா, லலிதாவை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.. ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி கோகிலாவும், லலிதாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதற்கிடையே தாய் சாந்தமீ நேரிடையாக போலீசில் சரணடைந்தார். அப்போது மகள் இருவரையும் விஷம் வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். மேலும் இதற்கான காரணம் குறித்து கூறுகையில் “நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தோம்.. என் கணவரின் சகோதரரும் எங்களுடன்தான் இருக்கிறார்.. அவர் பாக்கெட்டில் வைக்கும் பணம் அடிக்கடி காணாமல் போனது.. அந்த பணத்தை என் பொண்ணுங்கதான் எடுத்தனர்… அது வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அசிங்கம், அவமானம் வந்துவிடும் என்று பயந்து விட்டேன்.. அதனால்தான் குழந்தைகளுக்கு கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து தந்தேன்” என்றார்.

இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து சாந்தமீனாவை போலீசார் கைது செய்தனர்.. அவரிடம் தொடர் விசாரணை நடக்கிறது.


Share this News:

Leave a Reply