தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி!

Share this News:

சென்னை (02 ஆக 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


Share this News:

Leave a Reply