பிரபல நடிகைக்கு சூர்யா ரசிகர்கள் சரமாரி பதிலடி!

Share this News:

சென்னை (14 செப் 2020): நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு எதிரான பாஜக ஆதரவு நடிகை காயத்ரி ரகுராமுக்கு சூர்யாவின் ரசிகர்கள் சரமாரி பதிலடி கொடுத்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கை தமிழகமெங்கும் கொண்டாடப் பட்டு வருகிறது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கற நீட் தேர்வு.. என்பதாக சூர்யா அந்த அறிக்கையில் சாடியிருந்தார்.

கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது. என்பதாக நீதித்துறையை நேரடியாகவே சூர்யா சாடியிருந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் அறிக்கைக்கு நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியை கொண்டாட பேனர்கள் வைத்தபோது ரசிகர்கள் கீழே விழுந்து இறந்திருக்கிறார்கள். ரசிகர் மன்றங்களுக்காக பணத்தை செலவு செய்து ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். படங்களை தடை செய்துவிடலாமா?. லாஜிக் இல்லை தானே?. படித்து, தேர்வை தைரியமாக எழுத வேண்டும் என்று மாணவர்களை தயவு செய்து ஊக்குவியுங்கள். டாக்டர்களுக்கு நோயாளிகளை கவனிக்கும் ஒவ்வொரு நாளும் தேர்வு தான் என்று தெரிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம் கூறியதை பார்த்த சூர்யா ரசிகர்கள், சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது:

நீதாம்மா லாஜிக் இல்லாமல் பேசுற. ரசிகர்கள் பேனர் வைக்கும் போது விபத்து நேர்ந்தால், பேனர் கலாச்சாரத்தை தான் தடை செய்ய வேண்டுமே தவிர சினிமாவை அல்ல. தடை செய்ய வேண்டியது நீட் தேர்வை. மருத்துவத்தை அல்ல. ஏற்கனவே பேனர் எல்லாம் வைக்க வேண்டாம் என்று சூர்யா அவர்கள் முதல் பலர் தடை போட்டுள்ளார்கள்.

லாஜிக்கை பற்றி நீங்கள் எல்லாம் பேசக் கூடாது. சூர்யா மருத்துவ படிப்பிற்கு தடை விதிக்கக் கோரவில்லை. சம உரிமை அளிக்காத, மன அழுத்தத்தை ஏற்படுத்தும், மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை தான் ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைப்போமா?. அந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று விதிமுறை கொண்டு வருவோமா?. நீட்டும், பேனரும் ஒன்றா என்று தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply