அப்படி நான் சொல்லவே இல்லை – எஸ்பிபி சரண் மறுப்பு!

Share this News:

சென்னை (24 ஆக 2020): எஸ்பி பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வெளியான செய்தியில் உண்மையில்லை என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நேற்று தகவல் வெளியிட்டதாக எஸ்பிபி சரண் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று எஸ்.பி.சரண் தரப்பிலிருந்து வெளியானதாக பரவிய தகவலின்படி, எஸ்.பி.பிக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவத்தொடங்கியது. இந்நிலையில் இது வதந்தி என்று எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply