பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்த குஷ்பூ!

Share this News:

சென்னை (03 ஜூன் 2021): கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாஜகவினர் கருணாநிதியையும், திமுகவையும் சாடியே பதிவிடுவார். இந்நிலையில் குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் எனக்கொரு சிறந்த ஆசான் என்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பாஜக நிர்வாகி குஷ்பு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். குரு என்பவர் கடவுளுக்கும் மேலானவர். உங்கள் அருள் எனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர்தெரிவித்துள்ளார்.

இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த ;பதிவுக்கு திமுகவினர் குஷ்பூவை கிண்டலடித்தும் பதிவிட்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply