சீமான் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

Share this News:

சென்னை (02 ஏப் 2022): திருவெற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெற்றியூரில் அண்ணாமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிப்பதை கண்டித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு சென்றார்.

பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது சீமான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கபட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.


Share this News:

Leave a Reply