நெல்லை – பள்ளி கழிவறைச்சுவர் இடிந்து விபத்து :3 மாணவர்கள் பலி!

நெல்லை (17 டிச2021): நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டிலுள்ள பள்ளியொன்றில் கழிவறைச் சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாமாக உயிரிழந்துள்ளனர்.

நெல்லை பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களின்றி 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கே மேலும் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.

உடன் படித்த மாணவர்களின் இந்த உயிரிழப்பை தொடர்ந்து, அங்கு பள்ளியிலிருந்து பிற மாணவர்கள் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். தற்போது மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறனர்.

இந்த விபத்துக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. காவல்துறை தரப்பிலும் இதுகுறித்த விசாரணை தொடங்கியிருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply