தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (09 நவ 2021): கனமழையை அடுத்து கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 கடலோர மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று இரவு சென்னை வருகிறார்கள்.

சென்னையில் மழை குறைந்தாலும் வெள்ளம் தொடர்கிறது வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒரு வாரத்திற்குள் நல்லபடியாக நடக்கவில்லை என்றால், நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது..

மழை தொடங்கிய மூன்றாவது நாளில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார். கொளத்தூரிலும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply