கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Share this News:

சென்னை (16 நவ 2020): கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது.

இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை சென்னை மண்டல துணை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply