புதுச்சேரி ஆட்சி கலைப்பு பாஜகவுக்கு நெருக்கடியா?

Share this News:

புதுச்சேரி (23 பிப் 2021): புதுச்சேரியில் எதிர்க்கட்சித் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அங்கு மீண்டும் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

புதுச்சேரியில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். இதனை அடுத்து முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் துணை நிலை ஆளுநரின் நகர்வு எப்படி இருக்கும் என்பதும் முக்கிய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ரகசிய கோரிக்கை விடுத்துளதாக கூறப்படுகிறது.

அதேவேளை பிற மாநிலங்களை போல புதுசேரியில் பாஜக தன கைவரிசையை அதிக அளவில் கட்டிவிடமுடியாது என்பதால் பாஜகவுக்கு இது பெரிய நெருக்கடியாகவே அமையும் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply