ஒலை குடிசை வீட்டிலிருந்து ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர்!

Share this News:

திருத்துரைப்பூண்டி (18 மார்ச் 2021): திருத்துரைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் என அறியப்படுகிறார்.

49 வயதான மரிமுத்து 1994 முதல் அரசியலில் இருந்து வருகிறார். இவரது சொந்த ஊர் கடவக்குடி என்ற விவசாய கிராமம். ஓலை குடிசையில் வாழும் மாரிமுத்துவின் வீடு கடந்த காஜா சூறாவளியில் சேதமடைந்தது. பழுதுபார்க்கக்கூட முடியாதபடி தார்ப்பாய் மூலம் மட்டுமே வீடு சரிசெய்யப்பட்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். மாரிமுத்துவின் மனைவி ஜெயசுதா,

ஐந்து குழந்தைகளின் தந்தையான மாரிமுத்து வயல் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வருகிரார்.. கடந்த 13 ஆண்டுகளாக சிபிஐ (எம்) கோட்டூர் தொழிற்சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்

மரிமுத்து சட்டமன்ற வேட்பாளர் என்பதில் கடுவக்குடி கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். “மரிமுத்து எப்போதும் பொதுமக்களுக்காக உழைத்தவர். அதனால்தான் நாங்கள் அனைவரும் அவரை விரும்புகிறோம், ”என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

திருதிரைபூண்டி தொகுதி இடது கம்யூனிஸ்ட்டின் கோட்டடையாக கருதப்படுகிறது. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவை சேர்ந்தவர் . இந்த முறை திமுக கூட்ணியில் இந்திய கம்யூணிஸ்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் கிராமத்துக்காக நிறைய செய்ய முடியும் என்று மரிமுத்து நம்புகிறார்.


Share this News:

Leave a Reply