முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Share this News:

சென்னை (12 மே 2020): தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று ( மே 12ம் தேதி), தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

முதல்வர் பழனிசாமிக்கு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் பழனிசாமியின் பிறந்தநாளை, கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டுவிட்டரில் #HBDEdapadiyaar என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவையில் பணியாற்ற வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Share this News: