கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Share this News:

கோவை (05 மார்ச் 2020): கோவையில் மசூதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

இன்று (வியாழன்)காலை கணபதி வேதம்பாள் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் எந்தவித உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply