அதை விட்டுவிட்டு இதற்கு ஏன்? – அண்ணாமலையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சென்னை (22 மார்ச் 2022): தமிழக பட்ஜெட் தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை திடீரென உயர்ந்துள்ளது.

137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.76 காசு உயர்த்தப்பட்டு 92.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்து இன்று 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் இதனைக் கண்டுகொள்ளாத அண்ணாமலை, தமிழக பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். மட்டுமின்றி, போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இதனால் அண்ணாமலையை விமர்சித்துள்ள நெட்டிசன்கள், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு அண்ணாமலையின் காதுகளுக்கு எட்டவில்லையா? அதை விடுத்து தமிழக பட்ஜெட் குறித்து அவ்வளவு என்ன அக்கறை? முதலில் எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்த முன்வாரும் என கோரிக்கை விடுத்தும் அண்ணமலையை விமர்சித்தும் வருகின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply