நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு டஃப் கொடுப்போம் – தமிழக அமைச்சர்!

Share this News:

சென்னை (27 ஜூன் 2021): நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத அளவில் இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது. அக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்த தீர்மானம் ஜனாதிபதியோ அல்லது சுப்ரீம் கோர்ட்டோ நிராகரிக்க முடியாத வகையில் இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு. 100% நீட்தேர்வு இருக்காது. மாணவர்கள் அதை உணர்ந்து விட்டனர். எனினும் ஒரு வேளை நீட் தேர்வு நடத்தப்படும் சூழல் வந்துவிட்டால் மாணவர்கள் அதற்கு தயாராக வேண்டும். அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மூன்றாவது அலை வராமல் தடுக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருவதாகவும் ஒருவேளை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும், ஜூலை மாதத்திற்கான தொகுப்பில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகளாக மத்திய அரசு உயர்த்தி தர இருப்பதாகவும் அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply