தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு – மாரிதாஸ் மீண்டும் கைது!

Share this News:

தேனி(16 டிச 2021): தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய வழக்கிலும் யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க, தப்லீக் ஜமாஅத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோவொன்று வெளியிட்டிருந்தார்.

அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த வீடியோவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 04.04.2020 அன்று 292 A, 295 A, 505 ( 2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளின் அடிப்படையில், இன்று காலை தேனி சிறையில் கைது செய்யப்பட்டு, நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 5 ல் ஆஜர்படுத்தப்பட்டார் மாரிதாஸ். அப்போதுதான், “மாரிதாஸை டிச.30வரை சிறையிலடைக்கவும்” என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


Share this News:

Leave a Reply