பாஜகவினரை எதிர்ப்பேன் – குஷ்பு அதிரடி!

Share this News:

சென்னை (16 அக் 2020): பெரியாரை விமர்சிக்கும் பாஜகவினரை கட்டயமாக கண்டிப்பேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியாரை இன்றும் மதிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பெரியாரை பாஜகவினர் யாரும் விமர்சித்தால் அதனை கண்டிக்கும் முதல் ஆள் நான்தான்” என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

மேலும் “பெரியார் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்தவர் எனவே அவரை நான் தொடர்ந்து ஆதரிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்


Share this News:

Leave a Reply