மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பூ!

Share this News:

சென்னை (28 பிப் 2021): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நடிகை குஷ்பூ மன்னிப்பு கோரியுள்ளார்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பூ  முன்பு காங்கிரசில்  இருந்தபோது, சமூக ஊடகத்தில், பா.ஜ., தலைவர்களை அவர் விமர்சனம் செய்திருக்கிறார். தற்போது பாஜகவில் இணைந்ததும்  பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர் சமீபத்தில் சந்தித்த தலைவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சென்னை வந்த நிர்மலாவை போய் பார்த்தார். அப்போது டிவிட்டரில் நிர்மலா சீதாராமனை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

குஷ்பு, வரும் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், பா.ஜ.க  வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply