இப்போதைக்கு வாய்ப்பில்லை – கடம்பூர் ராஜு திட்டவட்டம்!

Share this News:

சென்னை (25 ஆக 2020): திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் இயங்க அனுமதி தந்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.” என்றார்.

மேலும் ஓ.டி.டி.யில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் சில காலம் பொறுத்திருந்து திரைப்படங்களை வெளியிடலம் என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply