பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Share this News:

கும்பகோணம் (02 டிச 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த மாதம் 21ம் தேதி காலை சக்கரபாணி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாகப் பேச வேண்டும் என்பதற்காகச் சொந்த வீட்டிலேயே சக்கரபாணி பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் போலீசில் சிக்கிய இந்து முன்னணி இயக்க நிர்வாகி சக்கரபாணி மீது தற்போது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply