முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் மரணம்!

Share this News:

சென்னை (21 டிச 2021): மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உதவியாளராக பணிபுரிந்த சண்முகநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

சுமார் 50 ஆண்டுகளாக தனி உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதனுக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சண்முகநாதன் உயிரிழந்தார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவரது கருத்துகளை எழுத்துமூலம் வெளியிட்டவர் சண்முகநாதன். அரசியல் வட்டாரங்களில் கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்பட்டார் இவர். கருணாநிதியால் எழுதமுடியாத சூழல் ஏற்பட்ட போதிலும் அவருடைய எழுத்துக்களை சண்முகநாதன் பதிவு செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply