மோடிதமிழகம் வருகை – போலி செய்திகளை வெளியிட்ட மீடியாக்கள்?

Share this News:

சென்னை (27 ஜூலை 2022): பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் மோடிக்கு எதிராக சமூக வலைதலங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கபடும் என்று காவல்துறை அதிகாரி கூறியதாக முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த செய்திகள் முற்றிலும் தவறானது என திமுக தரப்பினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

சென்னை மகாபலிபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி, செஸ் ஒலிம்பியட் போட்டி நடைபெறவுள்ளது. இதன் தொடக்கவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளார்.

இந்நிலையில் மோடி வருகையையொட்டி வழக்கமாக தமிழகத்தில் எதிர்ப்பு வலுக்கும், குறிப்பாக சமூக வலைதளங்களில் ‘கோபேக் மோடி’ என ட்ரெண்ட் ஆகும். இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் நிரூபர் ஒருவர் மோடியை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் காவல்துறை அதிகாரி, “நிலமையை கவனித்து வருகிறோம், சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. ” என்று பதிலளிப்பார். இதனை வைத்து திமுக அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தரப்பினர். இது அரசின் முடிவல்ல. ஒரு காவல்துறை அதிகாரியின் தகவல் என்பதாக விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் காவல்துறை அதிகாரியின் பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு வருவதாகவும் திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply