தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் கடும் எச்சரிக்கை!

Share this News:

சென்னை (28 ஜூன் 2021): முழுக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சீருடை, பேருந்து உட்பட இருந்து இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என தெரிவித்திருந்தது. மேலும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணையதள வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்றும் புகார்கள் வரும் பட்சத்தில் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

பள்ளிக் கல்வித்துறை உத்தரவை மீறி பல தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை கட்டாயப் படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. முழு கட்டணத்தை செலுத்துமாறு கூறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், 100% கட்டாயம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 4 நாட்களில் அரசு பள்ளியில் 1,500 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply