பாஜகவுக்கு தாவி ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ!

Share this News:

சென்னை .(14 மார்ச் 2021): தமிழகத்தில் தேர்தல் பிடித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தது.

இதில் திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மருத்துவர் சரவணன். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் எம்எல்ஏ சரவணன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply