முஸ்லிம்களுக்கு எதிரான விளம்பரம் – சென்னை பேக்கரி உரிமையாளர் கைது!

Share this News:

சென்னை (13 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் வெறுப்பை தூண்டும் விதமாக விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ஜெயின் பேக்கரிஸ் அண்ட் கன்ஃபெக்‌ஷனரிஸ் என்ற பேக்கரி, ராஜஸ்தானி ஹோம்மேட் வீட்டுத் தயாரிப்பில் பேக்கரி பொருட்கள் செய்து தரப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதோடு, மேல் பகுதியில் ஆர்டரின் பேரில் பொருட்கள் ஜெயின்களால் செய்யப் படுகிறது. அத்துடன், மதத் துவேஷத்தை வெளிப்படுத்தும் வண்ணம், “முஸ்லிம் பணியாளர்கள் இல்லை” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், “பெரிய ஆர்டர்கள் என்ற பெயரில் குறைந்தபட்ச ஆர்டர்களுக்காக இலவசமாக மாதிரியைக் கேட்டு அழைக்காதீர்கள்” என்றும் “நன்கொடைக்காக அழைக்காதீர்கள்” என்றும் விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவலானதைத் தொடர்ந்து, இந்த விளம்பரம் இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.

https://twitter.com/atti_cus/status/1258712145518161920

பேக்கரியின் சர்ச்சை விளம்பரம் இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டுள்ளதாக எழுந்த புகார்களை அடுத்து அந்த பேக்கரியின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

மேலும் அவர் மீது, கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆத்திரமூட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Share this News: