ஒரு வதந்தி பரவிய நிலையில் அடுத்த வதந்தி – பாஜக பிரமுகரை பிடிக்க தனிப்படை டெல்லி விரைவு!

Share this News:

சென்னை (05 மார்ச் 2023): தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்தி பரப்பிய உத்திர பிரதேச பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்வ்வை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய உ.பி. பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் டெல்லிக்கு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் பிரசாந்த் உமாராவை கைது செய்ய தமிழ்நாடு தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்கிற பொய்ச்செய்தி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இத்தகைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பாஜகவினரே அதிகமாக பகிர்ந்து வந்தனர். ஆனால் இது வேறு மாநிலத்தில் எப்போதோ நடந்த சம்பவம் என்பதும் தெளிவானது.

இந்நிலையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக வட மாநில தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து வட இந்திய மாநிலங்களுக்கு சென்றனர். இதனையும் பொய்யாக, வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என வேறொரு வதந்தி பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த தமிழ்நாட்டு காவல்துறையினர் அவரை கைது செய்ய டெல்லி விரைந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply