பஜகவிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!

Share this News:

மதுரை (14 ஆக2022): பா.ஜ.,கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.க,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ., வும் மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்து தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவில் அமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தேன்.

பா.ஜ.கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.கவில் இருந்து விலகுகிறேன். விலகுவதற்கான காரணம் குறித்து காலையில் பா.ஜ.கவுக்கு கடிதம் எழுத உள்ளேன். பா.ஜ.க தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply