பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுனருடன் திடீர் சந்திப்பு!

Share this News:

சென்னை (21 மார்ச் 2022): தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார்.

கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்ற அண்ணாமலை ஆர்.என்.ரவியை சந்தித்து மின்வாரியம் – பி.ஜி.ஆர். நிறுவனம் இடையிலான ஒப்பந்தம் குறித்து புகாரளித்து உள்ளார்.

இதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Share this News:

Leave a Reply