மதுரை அருகே முஸ்லீம் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட்!

Share this News:

மதுரை (19 பிப் 2022): மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் முஸ்லீம் பெண் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

திமுக அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்டை வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேற்றியதை அடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

இதன் காரணமாக அல்-அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply