புது மாப்பிள்ளை ஷமில் அஹமது முகத்தில் ஆசிட் வீச்சு – ஆம்பூரில் பரபரப்பு!

Share this News:

ஆம்பூர் (18 ஆக 2021): திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புது மாப்பிள்ளை ஷமில் அஹமத் முகத்தில் ஆசிட் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர் ஆயிஷா-பி நகர் பகுதியில் காலணி தொழிற்சாலை உள்ளது. இதில் தொழிலாளியாக பணியாற்றுபவ ஷமில் அஹமத். ஆகஸ்ட் 21ஆம் தேதி ஷமில் அஹமதுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு கம்பெனிக்கு வெளியே இவர் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியத்தில் ஷமில் முகம் பாதிக்கப்பட்டுள்ளது. வலியால் துடித்தவரை சக ஊழியர்கள் மீட்டுக்கொண்டுவந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

முதற்கட்ட சிகிச்சை முடிந்த பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து புகார் அளித்ததன் அடிப்படையில், ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். மேலும் ஆசிட் வீச்சுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply