ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையே விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்?

துபாய் (13 ஜூலை 2021): இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பயணிகள் விமானத் தடை, எதிர்வரும் ஜூலை 21 வரை தொடரும் என்பது உறுதி படுத்தப் பட்டுள்ளது. ஜூலை 21 க்குப் பிறகு ஜூலை 22 முதல் நிபந்தனைகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கப் படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை கிடைக்க வில்லை இந்தியாவுடன் சேர்த்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும்…

மேலும்...

துபாய் ஜபல் அலி துறைமுக கப்பலில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து!

துபாய் (08 ஜுலை 2021): துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் புதன்கிழமை இரவு ஒரு கப்பலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் அரசு அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் மோனா அல் மர்ரி கூறுகையில், விபத்து ஏற்பட்ட கப்பலில் அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் . தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. என்றார். துபாயின் பல பகுதிகளில் வசிப்பவர்கள் மாலையில் துறைமுகத்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்,. இந்த…

மேலும்...

எக்ஸ்போ 2020 க்கு தயாராகும் துபாய்!

துபாய் (03 ஜுலை 2021): எக்ஸ்போ 2020 க்கு துபாய் நகரம் தயாராகி வருகிறது. துபாய் எஸ்போ 2020 வரும் அக்டோபர் 1 ஆம் தேதி (2021) முதல் நடைபெறவுள்ள நிலையில் அதன் முனேற்பாடுகளை அதன் பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர். துபாயின் மகுட இளவரசரும் செயற்குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான ஏற்பாட்டுக் குழு எக்ஸ்போ 2021 முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தது. இந்த ஏற்பாடுகள் குறித்து ஷேக் ஹம்தான்…

மேலும்...

விடுமுறையில் ஊர் சென்று துபாய் திரும்பி செல்ல இயலாதவர்களுக்கு முக்கிய தகவல்!

துபாய் (03 ஜூலை 2021): கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE), இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், விடுமுறைக்கு இந்தியா வந்து மீண்டும் அமீரகம் திரும்பிச் செல்ல முடியாமல் தவிப்போருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Residence visa புதுப்பித்துக் கொள்ள ஒரு வலைதளம் அறிவித்துள்ளது. அதன் மூலம், அமீரகத்திற்கு வெளியே உள்ளோர் எந்தவிதக் கட்டணமும் இன்றி, இருந்த இடத்திலேயே எளிதாக  தங்களுடைய இணையம் மூலம் விசாவை புதுப்பித்து கொள்ளலாம்….

மேலும்...

சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை!

ரியாத் (03 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் சவுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. கோவிட்டின் மரபணு மாற்றப்பட்ட புதிய வகை வைரஸ்கள் பரவலை அடுத்து, இந்த அறிவிப்பை சவூதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை (ஜூலை 4, 2021) இரவு 11 மணி முதல் நடைமுறைக்கு வரும்….

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை!

துபாய் (02 ஜுலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் குடிமக்கள், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப் பட்டுள்ளது. விடுமுறைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வருவதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்ல ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – 5 நாடுகளுக்கான பயணத் தடை ஜூலை 21 வரை நீட்டிப்பு!

துபாய் (30 ஜூன் 2021): ஐக்கிய அரபு அமீரகம் 5 நாடுகளுக்கான பயணத் தடையை ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது. எதிஹாத் ஏர்வேஸை மேற்கோள் காட்டி கலீஜ் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும். பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எதிஹாத் ஏர்வேஸ் தனது டிவிட்டரில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும்...

பல்வேறு மதங்களிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய 2000 பேர்!

துபாய் (28 ஜூன் 2021) பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 2,000 பேர் இந்த 2021 ஆண்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையம் அறிவித்துள்ளது. துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் (ஐ.ஏ.சி.ஏ.டி) கீழ் செயல்பட்டு வரும் முகமது பின் ரஷீத் மையம் ஆகும். இது, பொதுமக்களுக்கு இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அதன் சகிப்புத்தன்மையுள்ள போதனைகளையும் கற்பிக்கும் அறக்கட்டளையாகும். இது, இஸ்லாமிய மதத்தைப் பற்றி தெரிந்து…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

துபாய் (27 ஜுன் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு டெல்டா வகை கொரோனா வைரஸும் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=vOHJ9hF2K6I இன்று, ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர். மேலும் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா பரவல் 2,000 திற்கும் அதிகமாக காணப்படுகிறது. நேற்று, சனிக்கிழமை மட்டும் 10 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்….

மேலும்...

ஜூலை 6 வரை துபாய்க்கு விமான சேவை இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுடெல்லி (24 ஜூன் 2021): வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை துபாய்க்கான விமான சேவை தொடங்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமான சேவைகள் நேற்று மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், . பயண ஏற்பாடுகள் தொடர்பான தெளிவின்மை நீங்காததால் துபாய்க்கான எந்த விமான சேவையும் தொடங்கவில்லை. இந்நிலையில், ஜூலை 6 வரை துபாய்க்கு எந்த சேவையும் இருக்காது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இரண்டு டோஸ்…

மேலும்...