திமுக எம்பிக்கள் மீது திருமாவளவன் பாய்ச்சல்!

சென்னை (14 மே 2020): திமுக எம்பிக்களின் பேச்சு தம்மை சார்ந்தவர்களை புண்படுத்தியதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற முக்கிய நிகழ்ச்சி மூலம், கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த மனுக்களை அரசிடம் ஒப்படைத்து – அதன்மீது நடவடிக்கை எடுக்க வைத்துதிமுக சார்பில் மனுக்களை அளிக்க தலைமைச் செயலாளர் அவர்களை திமுக எம்பிக்கள் சந்தித்து பேசியபோது, தலைமை செயலர் வித்தியாசமாக நடந்து கொண்டதாக திமுக எம்பிக்கள் குற்றம் சட்டியுள்ளனர். அதில், “நாங்கள்…

மேலும்...

கொரோனாவை விட கொடியது மத வெறுப்பு பிரச்சாரம் – திருமாவளவன் பொளேர்!

சென்னை (03 ஏப் 2020): கொரோனா வைரஸை விட கொடியது மத வெறுப்பூட்டும் பிரச்சாரம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தப்லீக் ஜமாத் அமைப்பின் சாா்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்றவா்கள் தாமே முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு…

மேலும்...

குஜராத் மாடலை டெல்லியில் நிகழ்த்திப் பார்க்க துடிக்கும் அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

சென்னை (25 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர்…

மேலும்...

திருச்சி மாநாட்டில் திருமாவளவன் திமுக மீது மறைமுக பாய்ச்சல்!

திருச்சி (23 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் கோட்டையில் கொடியேற்றும் என்றும் திமுகவுக்கு பல மெஸேஜ்களையும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசம் காப்போம் என்ற பெயரில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய திருமாவளவன், திமுகவுக்கு பல மறைமுக மெஸேஜ்களை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெறுமனே கோஷம்…

மேலும்...

தமிழகத்தை உத்திர பிரதேசமாக மாற்ற அதிமுக திட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

சென்னை (15 பிப் 2020): அமைதி பூங்காவான தமிழகத்தை உத்திர பிரதேசம் போன்று கலவர பூமியாக மாற்ற அதிமுக அரசு திட்டமிட்டு வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியுரிமைத் திருத்தச் சட்டம்; தேசிய மக்கள்தொகைப் பதிவேடு; தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை…

மேலும்...