shaheen-bagh

ஷஹீன் பாக் வழக்கை இப்போதைக்கு விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஷஹீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கை இப்போதைக்கு விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் 70 நாட்களையும் தாண்டி அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஒரு பக்கம் கலவரம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஷாகீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் டெல்லியில் நடந்து வரும் கலவரமும் முடிவுக்கு…

மேலும்...

டெல்லி கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர் மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி கலவரத்தை தூண்டியதாக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில்…

மேலும்...

6 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் பன்றிக் காய்ச்சல்!

புதுடெல்லி (25 பிப் 2020): உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் ஒரே நேரத்தில் பன்றிக்‍ காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டிருப்பது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டேவை, அவரது அறையில் சந்தித்த, நீதிபதி திரு.T.Y.சந்திர சூட், தாம் உட்பட நீதிபதிகள் 6 பேர், H1N1 பன்றி காய்ச்சல் வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளதாக கூறினார். பன்றி காய்ச்சல் சரியாகும்வரை, தங்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்குமாறு கேட்டுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர்,…

மேலும்...

இது தேவையா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விளாசும் முன்னாள் நீதிபதிகள்!

புதுடெல்லி (23 பிப் 2020): பிரதமர் மோடியை பாராட்டி பேசியதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்து பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது இந்த பேச்சுக்கு ஓய்வு…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் சரியானதுதான் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (17 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் தேவையான ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள்….

மேலும்...

உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஒமர் அப்துல்லாவின் தங்கை!

புதுடெல்லி (10 பிப் 2020): பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி அவரது தங்கை சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது…

மேலும்...

எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தம் அரசியலமைப்பு படி செல்லும் : உச்ச நீதிமன்றம் அதிரடி!

புதுடெல்லி (10 பிப் 2020): 2018ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தம் அரசியலமைப்பு படி செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, இந்த சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பு எந்த விசாரணையும் அவசியமில்லை என்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் ஒப்புதலும் தேவையில்லை…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லி ஷஹீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை…

மேலும்...

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல – முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்!

புதுடெல்லி (30 ஜன 2020): மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் மசூதிக்கு செல்வதில் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது தொடர்பான விசாரணையில் இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், “, மசூதிகளில் வழிபாட்டுக்காக…

மேலும்...

நிர்பயா வழக்கில் குற்றவாளியின் மனு தள்ளுபடி – பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு உறுதி!

புதுடெல்லி (29 ஜன 2020): நிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தது சரியே எனவும் உத்தரவிட்டனர். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி…

மேலும்...