ஐஐடி மாணவர் கல்லூரி மடியிலிருந்து குதித்து தற்கொலை

மும்பை (17 ஜன 2022): மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) மாணவர் கல்லூரி வளாகக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் 26 வயதுடைய இரண்டாம் வருட முதுகலைப் பயிலும் மாணவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் திங்கள் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வளாக கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. அவரது தங்கும் விடுதியில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் குறிப்பில்,…

மேலும்...

குவைத்தில் அதிகரிக்கும் வெளிநாட்டவர்களின் தற்கொலைகள்!

குவைத் (17 நவ 2021): குவைத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. டந்த பத்து மாதங்களில் நாட்டில் 120 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகள் ஏன் அதிகரித்து வருகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், குவைத்தில் 90 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு பத்து மாதங்களுக்குள் அது 120ஐ எட்டியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 12 பேர்…

மேலும்...

பிக்பாஸ் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!

பெங்களூரு (25 ஜன 2021): பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெயஶ்ரீ ராமைய்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும்…

மேலும்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு – மேலும் விவசாயி தற்கொலை

புதுடெல்லி (10 ஜன 2021): மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்குவில் மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பஞ்சாபின் ஃபதேகான் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மஷ்ராய் கிராமத்தைச் சேர்ந்த அமரிந்தர் சிங் (40) என்ற விவசாயில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் இதன் மூலம், விவசாய போராட்டத்தின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. போராட்டம் நடந்து கொண்டிருந்த பிரதான கூடாரத்தின் பின்புறத்தில் விவசாயி அமரிந்தர்…

மேலும்...

விவசாயிகளுக்காக தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மதகுரு!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் ஒரு சீக்கிய மதகுரு பாபா ராம்சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். விவசாயிகளின் அவலத்தால் விரக்திடைந்த அறுபத்தைந்து வயது பாபா ராம்சிங் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள கடிதம் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை தெளிவுபடுத்துகிறது. “உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிவரும் விவசாயிகளின் நிலைமை என்னைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அரசு அவர்களுக்கு நீதி வழங்கவில்லை..விவசாயிகளின்…

மேலும்...

விஜய் டிவி நடிகை சித்ரா தற்கொலையில் அடுத்த திருப்பம் – சிக்கும் தொகுப்பாளர் ரக்‌ஷன்!

சென்னை (15 டிச 2020): பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா -வின் தற்கொலை வழக்கில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கும் தொடர்பிருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேமந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை சித்ரா குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்களை ஒரு பிரபல…

மேலும்...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – கணவர் ஹேமந்த் கைது!

சென்னை (15 டிச 2020): விஜய் டிவி நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகை சித்ரா கடந்த வாரம் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார் . சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கணவர் ஹேமந்தும் உடனிருந்தார். அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சித்தராவின் முகத்தில் இருந்த காயங்கள் அவரது…

மேலும்...

சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் யாருடையது? போலீசார் பரபரப்பு தகவல்

சென்னை (10 டிச 2020): விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டார் . வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கணவரும் உடனிருந்தார். அவரை வெளியே…

மேலும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை!

சென்னை (09 டிச 2020): விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்….

மேலும்...

சமூக செயற்பாட்டாளர் ஷீட்டல் அம்தே தற்கொலை!

மும்பை (30 நவ 2020): பாபா ஆம்தேவின் பேத்தியும் சமூக செயற்பாட்டாளருமான ஷீட்டல் அம்தே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை விஷ ஊசி மூலம் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மயக்கத்தில் இருந்த ஷீட்டல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொழுநோய் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் இலாப நோக்கற்ற அமைப்பான மகாரோகி சேவா சமிதியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் வாரிய உறுப்பினராகவும் ஷீட்டல்…

மேலும்...