கொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (28 மே 2020): கொரோனா நோயை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் என்று அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு : “கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய – மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை….

மேலும்...

ஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

சென்னை (27 மே 2020): மீண்டும் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 14.2.2020 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த “2020-2021 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை” மற்றும் அதன் “மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள்” எல்லாம் உருவிழந்து, “கொரோனா பேரிடரால்” – அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய…

மேலும்...

அதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

ஊழல் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த அவர் திமுக ஊழல் குறித்து பேச எந்தவகையிலும் அருகதை இல்லாத கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்...

பாஜகவுடன் கூட்டு – திமுக முக்கிய தலைவர் அதிரடி நீக்கம்!

சென்னை (21 மே 2020): திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துரைசாமி பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணைபொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்...

கொரோனாவுக்கு இவங்கதான் காரணமா? -ஸ்டாலின் விளாசல்!

சென்னை (14 மே 2020): கொரோனா பரவலுக்கு காரணம் கோயம்பேடு மார்கெட் ஊழியர்கள் என்று பழி போடுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” கொரோனா நோய்த்தொற்று குறித்து , சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. முகக்கவசம் வழங்க வேண்டும் எனச் சொன்னபோது , அதனை மறுத்து, “கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது” என்று முதலில் “ஆரூடம்” சொன்ன…

மேலும்...

ஸ்டாலின் மீதான கிண்டல் எதிரொலி – சன் டிவி தலைமை செய்தியாளர் நீக்கம்!

சென்னை (21 ஏப் 2020): சன் டிவி தலைமை செய்தியாளர் ராஜாவை நீக்கம் செய்து சன் டிவி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாறன் பிரதர்ஸ் நடத்தும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடித்து வந்த வந்த வாட்ஸ் அப் மீம் ஒளிபரப்பு செய்யப் பட்டதாகவும் இதன் எதிரொலியாக, சன் டிவியின் தலைமை செய்தியாளரான ராஜா நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ராஜா உட்பட மேலும் மூவரும் நீக்கப் பட்டுள்ளதாக ட்விட்டரில்…

மேலும்...

உண்மையை சொல்லுங்கள் – தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா பரிசோதனை கருவி தமிழகத்திற்கு எத்தனை வாங்கப்பட்டது என்பது குறித்து வெளிப்படைத் தன்மை இல்லை என்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் தெரிவித்திருப்பதாவது: “கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சட்டீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது…

மேலும்...

போக்குவரத்து காவலர் மரணம் – ஸ்டாலின் பரபரப்பு கருத்து!

சென்னை (09 ஏப்ரல் 2020): சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் 24 மணிநேர பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடன் அவர் அருகில்…

மேலும்...

ஸ்டாலினுக்கு மோடி – அமித்ஷாவிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு!

சென்னை (05 ஏப் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு…

மேலும்...

துரைமுருகன் திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகல் – ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

சென்னை (16 மார்ச் 2020): திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதால் துரைமுருகன் திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது குறித்த அறிவிப்பில், கடந்த 15-3-2020 அறிக்கையின் வாயிலாக, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், 29-3-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 16-3-2020 கடிதத்தின் வாயிலாக…

மேலும்...