RSS

ஆர் .எஸ்.எஸ் பேரணி – மேல் முறையீடு செய்ய முடிவு!

சென்னை (05 நவ 2022): நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நிபந்தனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

ஆர்எஸ்எஸ் குறித்து சொன்னது என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்!

சென்னை (20 ஜூன் 2021:ஆர்.எஸ்.எஸ். குறித்து கூறியது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ்.தொடங்கும் முதல் ராணுவ பள்ளி!

லக்னோ (28 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முதல் ராணுவ பள்ளியை தொடங்குகிறது. உ.பி., மாநிலம் புலந்த்செகரில், ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளி துவங்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த ராஜு பையாவின் பெயரில், ‘ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்’ என அழைக்கப்படும். பள்ளியின் கட்டடம் தயாராக உள்ள நிலையில் வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கவுள்ளது. மேற்கண்ட தகவலை ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டாளர் கேணல் சிவ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும்...