அரசு இன்றே நடவடிக்கையில் இறங்க வேண்டும் – ப.சிதம்பரம் கோரிக்கை!

சென்னை (06 ஏப் 2020): பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இதனை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பிரதமர் மோடியும் எதிர் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அறிஞர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து தனது…

மேலும்...

மத்திய அரசின் திறமையின்மையால் மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – ப.சிதம்பரம் பாய்ச்சல்!

சென்னை (07 மார்ச் 2020): நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையை இந்தப் பிரச்னை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். வாராக் கடன் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான யெஸ் வங்கியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு…

மேலும்...

டெல்லி வன்முறையும் உயிரிழப்புகளும் – ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையும் உயிரிழப்புகளும் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ;- “ வன்முறைகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டுமெனில் குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் மக்களிடையே பிளவை உருவாக்கும் என ஏற்கனவே எச்சரித்தோம். குறுகிய பார்வை கொண்டோரை ஆட்சியில் அமர வைத்ததற்கான விலையை மக்கள் அளித்து வருகின்றனர்….

மேலும்...