சவூதி ஜித்தாவில் மிகப்பெரிய மதுபான கிடங்கு – அதிகாரிகள் சோதனையில் சிக்கியது!

ஜித்தா (20 ஜன 2023):சவூதி அரேபியா ஜித்தா நகரில் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சட்டவிரோத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு ஜித்தாவில் உள்ள அல் தய்சீர் மாவட்டத்தில் உள்ள இந்த சட்டவிரோத கிடங்கில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கு இருந்த சட்டவிரோத கிடங்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த மையம், மதுபானங்களை சேமித்து வைக்கும் கிடங்காக தவறாக பயன்படுத்தப்பட்டது சோதனையின்போது தெரியவந்தது. நகராட்சி…

மேலும்...

மதுக்கடையில் மது வாங்கிக்குடித்த 6 பேர் பலி!

ரேபரேலி (27 ஜன 2022): உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடையில் மது வாங்கி பருகிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள பஹார்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் ஐவர் மற்றும் மூன்று கலால் துறை அதிகாரிகள் என 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று இரவு நடைபெற்ற விசேச நிகழ்வில் பங்கேற்ற சிலர் மதுபானம் வாங்கிப் பருகி…

மேலும்...

நடிகை ரம்யா கிருஷ்ணன் பயணித்த காரில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள்!

சென்னை (13 ஜூன் 2020): நடிகை ரம்யா கிருஷ்ணன் பயணித்த காரில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக்…

மேலும்...

மது கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி (08 மே 2020) மது விற்பனையை மது கடைகளில் விற்காமல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில மதுபானக் கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிற்பனையை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கே தட்டுப்பட்டு – இதில் இதன் விலை ஏற்றத்தால் குடிமகன்களுக்கு கவலை!

சென்னை (06 மே 2020): மது கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்‍கும் டாஸ்மாக்‍ மதுபானக்‍ கடைகள் நாளை முதல் திறக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது திடீரென மதுபானம் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்‍கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டதால், தமிழகத்தில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து வகை மதுபானங்களும்…

மேலும்...