ஒரே நாளில் 260 பேர் பலி – இந்தியாவை அதிர வைக்கும் கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (045 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை…

மேலும்...

விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டது உண்மையா?

புதுடெல்லி (04 ஜூன் 2020): மோசடி மன்னன் விஜய் மல்லையா இந்தியா அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை இங்கிலாந்து மறுத்துள்ளது. வங்கி மோசடி செய்துவிட்டு லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் பரவின. அங்குள்ள ஆர்தர் சாலை சிறையில் அவர் அடைக்கப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், இதனை மல்லையாவின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9,961 கோடி கடன் ஏய்ப்பு செய்துவிட்டு லண்டனுக்கு…

மேலும்...

இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா – பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது!

புதுடெல்லி (02 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 96,000-ஐ கடந்தது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு…

மேலும்...

கொரோனா பாதிப்பு இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகரிப்பு – இறப்பு எண்ணிக்கையும் உயர்வு!

புதுடெல்லி (31 மே 2020): இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. கொரோன வைரஸ் காரணமாக க இறந்தவர்களின் எண்ணிக்கை 5164 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 8380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நாளில் உறுதிப்படுத்தப்பட்ட அதிக எண்ணிக்கையாகும். இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 182142 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 89995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 86984 பேர்…

மேலும்...

நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு!

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு…

மேலும்...

கொரோனா மரணங்களில் சீனாவை முந்திய இந்தியா!

புதுடெல்லி (29 மே 2020): கொரோனா மரணங்களில் இந்தியா சீனாவை முந்தியுள்ளது. மேலும் உலக அளவில் 9 ஆவது இடத்தில் உள்ளது. உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதுடன் இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கிட்டத்தட்ட 59 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் உலகெங்கிலும்…

மேலும்...

ட்ரம்பின் சமாதான முயற்சியை ஏற்க சீனா மறுப்பு!

புதுடெல்லி (29 மே 2020): எல்லைப் பிரச்சினைகள் குறித்த பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த வாய்ப்பை சீனா நிராகரித்துள்ளது. முன்னதாக இந்தியா – சீனா எல்லை பிரச்னையில் அமெரிக்கா நடுவராகவோ அல்லது தூதராகவோ இருந்து இரு நாடுகளுக்கும் உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில்…

மேலும்...

போருக்கு தயாராகும் இந்தியா? – பிரமர் முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி (27 மே 2020): இந்தியா சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் இதேபோல் சீனாவின் ராணுவ தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார். சிஎம்சி மற்றும் பிஎல்ஏ என்ற இரண்டு முக்கியமான ராணுவ படைகள் உடன் ஜி ஜிங்பிங் ஆலோசனை செய்தார். அப்போது சீன நாட்டு வீரர்கள் போருக்கு தயார்…

மேலும்...

இந்தியாவிற்கு இப்படி இன்னும் ஒரு ஆபத்தா?

புதுடெல்லி (26 மே 2020): இந்தியாவிற்குள் திடீரென நுழைந்துள்ள வெட்டுக்கிளிகளால் இன்னொரு ஆபத்து வந்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக் கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன. இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு பிந்தைய…

மேலும்...

கொரோனா வைரஸ் தொற்றில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி (25 மே 2020): உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் உலகை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட, கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியா நேற்றுவரை 11-வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக…

மேலும்...