டெல்லி கலவரத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த முஹம்மது புர்கான்!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட மூன்று பேர் கொல்லப் பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் இருவர் உட்பட மூன்றுபேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் நடைபெற்ற பேரணி – வீடியோ தொகுப்பு!

சென்னை (20 பிப் 2020): இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜமாத்துல் உலமா சபை தலைமையில் தமிழகமெங்கும் பிப்ரவரி 19 அன்று பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில்…

மேலும்...

உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுவதா? – முதல்வருக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (17 பிப் 2020): வண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி குறித்த முதல்வரின் அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராகவும், சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் தன்னெழுச்சியாகப் போராடி வரும் மக்கள் மீது, அடக்குமுறையை கையாண்டு தடியடி நடத்தி வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதியான வழியில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்: தொடரும் நான்காவது நாள் போராட்டம் – வீடியோ!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்து சென்னையும் டெல்லியை போன்று ஷஹீன் பாக்காக மாறியது. இதனை தொடர்ந்து…

மேலும்...

தமிழகத்தில் சிஏஏ போராட்டத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

சென்னை (16 பிப் 2020): தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் போராட்டம்…

மேலும்...

சென்னையில் ஷஹீன் பாக் – மீடியா ஒன் தொலைக்காட்சியின் முழு கவரேஜ் – VIDEO

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லி ஷஹீன் பாக்காக மாறியுள்ள நிலையில் சனிக்கிழமை போராட்டக் களத்தை நேர்மையாக செய்தி தந்துள்ளது மலையாள சேனலான மீடியா ஒன் தொலைக்காட்சி. குறிப்பாக பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. குறிப்பாக கட்சி, மத பேதமின்றி அதிமுக, பாஜக தவிர அனைத்து சமூகத்தினரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை இப்போராட்டக் களம் காட்டுகின்றது. தமிழக சட்டமன்றத்தில் கேரளா, பஞ்சாபைப் போன்று குடியுரிமை…

மேலும்...

முஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதை – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

லக்னோ (13 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதாக பொய் கூறி உபி சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்திர பிரதேசத்தில் நடந்தபோது, போலீசார் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொன்று குவித்தனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் முதலில் அதனை மறுத்தனர் பின்பு ஒத்துக் கொண்டனர். இந்நிலையில் உண்மையில்…

மேலும்...

அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் – ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் திட்டவட்டம்!

புதுடெல்லி (20 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அஹிம்சை வழியில் போராடி வரும் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் ஜனவரி 22 உச்ச நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்கின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரும் பெண்களின் சரித்திரப் போராட்டம் -வீடியோ!

புதுடெல்லி (19 ஜன 2020): தேசிய கொடியுடனும் தேசிய கீதத்துடனும் டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு ,…

மேலும்...