ஹிஜாப் தடை விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (23 ஜன 2023): ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. மேல்முறையீடுகளை நிராகரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாபைத் தடை…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இரு மாறுபட்ட தீர்ப்பு!

புதுடெல்லி (13 அக் 2022): கர்நாடக அரசின் ஹிஜாப் தடை குறித்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனால் கர்நாடக நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை…

மேலும்...

ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரியில் போராட்டம்!

சென்னை (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை குறித்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தரவை எதிர்த்து கோசங்களை எழுப்பினர். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது.

மேலும்...